தொடர் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
நாகை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பரவலாக பெய்து வரும் மழையால் ஒரு சில இடங்களில் தாளடி இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
Update: 2024-01-08 03:02 GMT
நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் திருமகல், கீழ்வேளூர், கீழையூர், தலைஞாயிறு பகுதியில் தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தாளடி நெல் பயிர்கள் 30 நாள் முதல் 60 நாள் பெயராக உள்ளது கர்நாடகா மாநிலத்திலிருந்து இந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்காத நிலையில் இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு குறுவை சாகுபடி நடைபெற்று அறுவடை நடைபெற்றது. இந்த நிலையில் தாளடி சாகுபடியை காலத்தில் செய்ய முடியாத நிலையில் பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மூலம் தாளடி சாகுபடி காலதாமதமாக தொடங்கினர். இந்நிலையில் தற்போது 30 நாள் முதல் 60 நாள் பயிராக உள்ள நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது இந்நிலையில் நாகை மாவட்டத்தில் பரவலாக இரண்டு நாட்கள் மழை பெய்தது இதனால் நெல் வயல்களில் நீர் தேங்கி களை எடுக்க உரம் இட என 15 நாட்களுக்கு தேவையான மழை நீர் கிடைத்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் இந்நிலையில் 30 முதல் 40 நாள் வயதுடைய தாளடி நெற்பயிர்கள் தற்பொழுது பெய்த கனமழையால் மூழ்கியுள்ளது