தொடர் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

Update: 2023-12-06 07:49 GMT

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று தெற்கு ஆந்திராவில் கரையை கடக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில், அடுத்த இரு நாட்கள் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், வருவாய், காவல், தீயணைப்பு, மின் வாரியம் உள்ளிட்ட 11 துறை அதிகாரிகள் அடங்கிய, 21 மண்டல குழுக்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனர். இதுதவிர, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து, தேசிய பேரிடர் மேலாண்மை துறையினர், குன்றத்துார் தாலுகாவில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன் தினம், நேற்று பெய்த மழையால், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த, நெற்கதிர் முழுதும் நீரில் மூழ்கியது. குறிப்பாக, வாலாஜாபாத் ஒன்றியம், பரந்துார், நாகப்பட்டு, ஈஞ்சம்பாக்கம், வேளியூர், புதுப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்கதிர் நீரில் மூழ்கியது.
Tags:    

Similar News