வழுத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி கோவிலில் பாலாலயம்
வழுத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடந்த பாலாலய நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வழுத்தூரில் ஸ்ரீ சுந்தராம்பிகை உடனாகிய ஸ்ரீ கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோயில் ஆகும் கோவில் மிகவும் சிதிலமடைந்த காணப்படுவதால் புரணமைக்கும் பணிக்காக அரசு ஆணையர் நிதியிலிருந்து 84 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது அதனைத் தொடர்ந்து கோயில் புரணமைத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பாலாலயம் வைபவம் நடைபெற்றது.
பாலாலயம் நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று முதல் நாள் கணேச பூஜை வாஸ்து பூஜை உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் தொடங்கி இன்று இரண்டாம் கால பூஜைகள் நடைபெற்று ஜபம் ஹோமமும் அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹுதி கலசாபிஷேகமும் மங்கள தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பாலாலய நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் ஹாசினி திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.