பழநி மலைக்கோவிலில் நாளை முதல் அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு

பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் நாளை முதல் வரும் 32 நாட்களுக்கு, தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கவுள்ளன.

Update: 2023-12-16 10:14 GMT

பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் நாளை முதல் வரும் 32 நாட்களுக்கு, தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கவுள்ளன.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலை கோவிலில் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் 32 நாட்களுக்கு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

நாளை ஞாயிற்றுக்கிழமை மார்கழி மாத பிறப்பையொட்டி ஆனந்த விநாயகர் சந்நிதி முன் சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு மூலவர் சந்நிதி அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.மார்கழி மாதம் முழுவதும் காலையில் மூலவருக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெறுவதால் அடுத்த 29 நாட்களும் அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்படுகிறது. பின்னர் தை முதல் தேதி பொங்கல் அதற்கு அடுத்த 2 நாட்கள் தொடர்ந்து மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் வருவதால் தை மாதம் முதல் மூன்று நாட்களுமே அதிகாலை 4 மணிக்கு சன்னதி திறக்கப்படுகிறது.

Tags:    

Similar News