கிடப்பில் பாலாறு தடுப்பணை திட்டம்; விவசாயிகள் கேள்வி

காஞ்சிபுரத்தில் நடந்த விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில், பாலாறு தடுப்பணை திட்டம் கிடப்பில் உள்ளது குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டது.

Update: 2024-07-03 11:54 GMT

  காஞ்சிபுரத்தில் நடந்த விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில், பாலாறு தடுப்பணை திட்டம் கிடப்பில் உள்ளது குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டது. 

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், லோக்சபா தேர்தலுக்கு பின், மூன்று மாதங்கள் கழித்து, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. இதில், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.

வேளாண் துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் பற்றி, கூட்டரங்கு வெளியே காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், பாலாற்றில் நான்கு ஆண்டுகளாக புதிய தடுப்பணை கட்டாதது, காட்டு பன்றிகளை வனத்துறையினர் கட்டுப்படுத்தாதது, மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை என, விவசாயிகள் சரமாரியாக குற்றஞ்சாட்டினர். இதற்கு, கலெக்டர் கலைச்செல்வி மற்றும் துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர். கூட்டத்தில், 15 விவசாயிகளுக்கு வேளாண் பயிர் செடிகள் மற்றும் பசுந்தாள் உர விதைகளை கலெக்டர் வழங்கினார்.

மேலும், கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, 19 விவசாயிகளுக்கு, 20.95 லட்சம் ரூபாய் மதிப்பில் பயிர் கடன்களும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், 3 விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்கும் பணி ஆணையையும் கலெக்டர் வழங்கினார்.

Tags:    

Similar News