பஞ்சரத்தின கீர்த்தனை இசை ஆராதனை
திருவாரூரில் கர்நாடக சங்கீத இசை கலைஞர்கள் பஞ்சரத்தின கீர்த்தனைகளை வாசித்து இசை ஆராதனை செய்து தியாகராஜரை வழிபட்டனர்.;
Update: 2024-04-17 04:02 GMT
இசை ஆராதனை
சங்கீத உலகின் மும்மணிகள் என போற்றப்படும் ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள், ஸ்ரீ சத்குரு தியாகராஜர் ,ஸ்ரீ முத்துசாமி தீட்சதர் ஆகிய மூவரும் திருவாரூரில் சமகாலத்தில் பிறந்து சாஸ்திரிய சங்கீதத்தை வளர்த்து இசை என்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்து வந்த அளவில் அவர் அவதரித்த ஜென்ம பூமியில் கர்நாடக சங்கீத இசை கலைஞர்கள் அமர்ந்து ஸ்ரீ சத்குரு தியாகராஜர் இயற்றிய பிரசித்து பெற்ற பஞ்சரத்தின கீர்த்தனைகளையும் அவரது பல்வேறு சங்கீத கீர்த்தனைகளையும் பாடி இசை ஆராதனை செய்து ஸ்ரீ சத்குரு தியாகராஜரை மனமுருக வழிபட்டனர்.