ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்ட ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள்
செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கரியமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
Update: 2023-12-09 04:40 GMT
ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்ட ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம் ஊராட்சிக்கு ஊராட்சி மன்ற தலைவராக செல்வி சீனிவாசன் என்பவர் உள்ளார். இந்நிலையில் அவரது கணவர் ஊராட்சி மன்ற செயல்பாடுகளில் தலையிடுவதாகவும் தனிப்பட்ட முறையில் வார்டு உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுவதாகவும் தீர்மான புத்தகத்தை உறுப்பினர்களுக்கு காண்பிப்பதில்லை எனவும் கூறி வார்டு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு நேற்று பூட்டு போட்டனர். இதனால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் வார்டு உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் நடைபெற்றுள்ள பணிகள் குறித்தும், பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் நேரடியாக புகார் அளிக்க போவதாகவும் வார்டு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.