குமரியில் 6 இடங்களில் ஊராட்சித் தலைவர்கள் தர்ணா போராட்டம் 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தவதை கண்டித்தும், ஊராட்சிகளை பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுடன் இணைப்பதை கண்டித்து 6 இடங்களில் ஊராட்சி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-23 07:50 GMT

தர்ணா போராட்டம் 

கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தவும் 34 ஊராட்சிகளை பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகம் முன்பு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் தர்ணா  போராட்டம் நடந்தது. ஞாலம் ஊராட்சி தலைவர் சதீஷ் தலைமை வகித்தார். இறச்ச குளம்  ஊராட்சி தலைவர் நீலகண்டன் ஜெகதீஷ் முன்னிலை வகித்தார்.  செண்பகராமன் புதூர் ஊராட்சி தலைவர் கல்யாணசுந்தரம் வரவேற்றார். ஊராட்சி தலைவர்கள் பிராங்கிளின், கமலா, தானம்மாள், கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  போராட்டம் மார்த்தாண்டம், கன்னியாகுமரி, கருங்கல், தக்கலை, குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் நூறு நாள் திட்ட பணியாளர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News