ஊராட்சி செயலாளர்கள் ஆய்வு கூட்டம்
திருமயத்தில் ஊராட்சி செயலாளர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-10 17:27 GMT
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
திருமயம் அரிமளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் வெங்கடேச பிரபு தலைமை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணராஜா வரவேற்றார் 32 கிராம ஊராட்சிகளின் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சிகளின் கணக்குகள் பராமரிப்பு மற்றும் பயன்பாடு இல்லாத கணக்குகளை நீக்கம் செய்தல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பிரதமர் வீடு கட்டும் திட்டம் போன்றவற்றில் தவறுகள் நடக்காமல் பணியில் போதிய கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன் நன்றி கூறினார்.