பழனியில் வாகனங்கள் மீது மோதிய ஆட்டோவால் பரபரப்பு
பழனியில் வாகனங்கள் மீது மோதிய ஆட்டோவால் பரபரப்பு ஏற்பட்டது.
By : King 24X7 News (B)
Update: 2023-12-26 11:35 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி காந்தி மார்க்கெட் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் மார்க்கெட் அருகே சாலையில் ஆட்டோ இரு சக்கர வாகனங்கள் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியது.
இதனால் ஆட்டோவும், இருசக்கர வாகனமும் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் ஓடியதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.