கும்பகோணத்தில் பரபரப்பு: வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைத்த கிராம மக்கள்

கும்பகோணத்தில் பட்டா வழங்க கோரி வாக்காளர் அடையாள அட்டைகளை அரசு அலுவலர்களிடம் கிராம மக்கள் ஒப்படைத்துள்ளனர்.

Update: 2024-03-01 08:58 GMT
அட்டைப் பெட்டியில் வாக்காளர் அடையாள அட்டைகள்

கும்பகோணம் அருகே பட்டா வழங்கக் கோரி, தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை 8000க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் ஒப்படைத்துள்ள சம்பவம், தஞ்சை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவிலில் நான்கு வீதிகளிலும், மணல்மேடு தெரு, தோப்புத்தெரு, நேதாஜி தெரு பகுதிகளில் 3000 மேற்பட குடியிருப்புகளில் எட்டுக்கும் அதிகமானோர் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் குடிநீர் வரி, சொத்து வரி, மின் இணைப்பு வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை செலுத்தி, ஆதார் அட்டை, குடியிருப்பு அடையாள அட்டை பெற்றுள்ளனர்.

இவர்கள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கேட்டு பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசு பதிவேட்டில் ஏற்பட்டுள்ள தவறை சரி செய்து தங்களுக்கு விரைந்து பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும், தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் கூறி திருநாகேஸ்வரம் கிராம அலுவலரிடம் இப்பகுதி மக்கள் 8000 பேரின் வாக்காளர் அடையாள அட்டைகளை அட்டை பெட்டியில் வைத்து ஒப்படைத்துச் சென்றனர்.

அப்போது அங்கு ஆய்வுக்கு வந்திருந்த கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இருந்தபோதிலும் கிராம மக்கள் பெற்று செல்லவில்லை.

Tags:    

Similar News