வடபழனி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா துவக்கம்

பரமத்தி வேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் விஜயகிரி வட பழனி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

Update: 2024-03-17 09:19 GMT

பரமத்தி வேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோயில் தேர் திருவிழா இன்று தொடங்கி வரும் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. தொடர்ந்து இன்றுமுதல் 23 ஆம் தேதி வரை தினந்தோறும் சுவாமி மயில்,குதிரை,யானை உள்ளிட்ட வாகனங்களில்  எழுந்தருளல் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், திருக்கல்யாண உற்சம், பூ பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமி திருத்தேரில் எழுந்தருள் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 25 ஆம் தேதி சத்தாபரணம் ( கொடி இறக்குதல்), 26 ஆம் தேதி சுவாமி மஞ்சள் நீர் உற்சவமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாட்டை இந்து அறநிலையத்துறை, பிலிக்கல்பாளையம் கரட்டூர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News