பாலசுப்பிரமணியசாமி கோவிலில் பக்தர்கள் காவடி ஊர்வலம்
சேலம் அஸ்தம்பட்டி பாலசுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகனை வழிபட்டனர்.
Update: 2024-03-26 03:59 GMT
சேலம் அஸ்தம்பட்டி கலைவாணர் தெருவில் உள்ள பாலசுப்பிரமணியசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுகிறது. அதன்படி இந்தாண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 23-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 24-ந்தேதி பால்குட ஊர்வலமும், நேற்று காவடி ஊர்வலமும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக வந்து வழிபட்டனர். முன்னதாக பாலசுப்பிரமணியசாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.