வடசென்னிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர விழா
வடசென்னிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது.
Update: 2024-03-18 09:48 GMT
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வடசென்னிமலை பாலசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. பழமையானஇந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்றுதொடங்கியது. நேற்று காலை விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள், வாஸ்துபூஜைகள் நடந்தன. காட்டுக்கோட்டை புதூர்கட்டளைதாரர்கள் மூலம் காலை 10 மணிக்கு கோவில்அடிவாரத்தில் வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்புபூஜை வழிபாடு நடந்தது. பின்னர் வடசென்னிமலை பாலசுப்பிரமணி சுவாமி கோவில் வளாகத்தில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. காலை 11 மணிக்கு மேல் காட்டுக்கோட்டை புதூர் கட்டளைதாரர்கள் சேவல் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். கொடியேற்றத்தை முன்னிட்டு மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வருகிற 25-ந் தேதி மாலை 3 மணிக்கு மேல் 4 மணிக்குள் வடசென்னிமலை பாலசுப்பிரமணியசாமி பங்குனி உத்திர தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பழனிவேல் செய்துள்ளார்.