பங்குனி உத்திர திருவிழா தொடக்கம் !
இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா, பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-18 05:33 GMT
பங்குனி உத்திர திருவிழா
பழனி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா, பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் 23ஆம் தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், அடுத்த நாள் பங்குனி உத்திரத்தன்று தேரோட்டமும் நடக்கிறது.