பாபநாசம்: வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்
பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணியை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தொடங்கி வைத்தார்.;
Update: 2024-04-07 06:53 GMT
பூத் சிலிப் விநியோகம்
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பாலைத்துறை பகுதியில் பூத் சிலிப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருமான முத்துகிருஷ்ணன் கலந்து கொண்டு வீடு வீடாக வாக்காளர்களை நேரில் சந்தித்து பூத் சிலிப் வழங்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் கிராம நிர்வாக அலுவலர் ஜோதி பாண்டியன் கிராம உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து பாபநாசம் சட்டமன்ற தொகுதி முழுவதும் வீடு வீடாக வாக்காளர்களை நேரில் சந்தித்து பூத் சிலிப்பினை வழங்கி வருகிறார்கள்.