பெருமாள் கோயிலில் சிறப்பு ஹோமம் திருமஞ்சனம் அபிஷேகம்

பாபநாசத்தில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் திருமஞ்சனம் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.;

Update: 2024-05-29 15:14 GMT

பெருமாள் கோயில்

 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பங்கஜவல்லி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் வைகாசி திருவோண பெருவிழா நடைபெற உள்ள நிலையில் பெருமாள் சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

அதனை முன்னிட்டு பங்கஜவல்லி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் , தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ அலங்காரமும், சிறப்பு ஹோமம் , திருமஞ்சன பூஜைகளும் நடைபெற்றது. பிரமோற்சவ விழாவையொட்டி திருமஞ்சனம் செய்து பாலாபிஷேகம் மஞ்சள் பஞ்சாமிர்தம் , தேன் , இளநீர் , மஞ்சள் ஆகிய திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாரதனை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் விக்னேஷ் ,ஆய்வாளர் லட்சுமி ,பாபநாசம் இறைப்பணி மன்ற தலைவர் குமார், மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News