திமுக மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

வாக்குச்சாவடி முகவர்கள், தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

Update: 2024-02-24 18:34 GMT

திமுக ஆலோசனை கூட்டம்

2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிகுட்பட்ட மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், தொகுதி உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள், தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் பூத் கமிட்டி உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகளை சந்தித்து இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற முழக்கத்தில் வீடு வீடாக கழக ஆட்சியில் சாதனைகளை எடுத்துக் கூறி திண்ணை பிரச்சாரம் செய்ய கடிச் தலைமை உத்தரவிட்டுள்ளது.

அது தொடர்பாக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சரும், திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன்  திமுக பிரச்சாரம் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகள் திமுக மேற்கு மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் வாக்குச்சடி முகவர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News