நாகையில் கவாத்து பயிற்சி நிறைவு விழா

நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு கடந்த 15 நாட்களாக நடத்தப்பட்ட கூட்டுத்திரட்டு கவாத்து பயிற்சி நிறைவு விழா ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்றது.

Update: 2024-03-02 10:41 GMT

விழாவில் கலந்து கொண்டவர்கள்

 நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்உத்தரவின் பேரில் நாகை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவல்துறையினருக்கு கடந்த 20.01.2024 முதல் 08.02.2024 வரை 15 நாட்கள் கூட்டு திரள் கவாத்து பயிற்சி நடைபெற்றது.

நாகை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் 222 காவல்துறையினருக்கு நடத்தப்பட்ட இந்த பயிற்சியில் அன்றாட பணிகள் குறித்தும், மைதானத்தில் பின்பற்றப்படும் கவாத்துகள் குறித்தும், ஆயுதங்களை எவ்வாறு கையாளுதல் என்பதனை குறித்தும், கைதிகளை சிறைக்கு எடுத்துச் சொல்லும் போது வலிக்காவல் குறித்தும், நினைவூட்டும் பயிற்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காலை முதல் மாலை வரை நடைப்பெற்றது.

இப்ப பயிற்சி நிறைவு விழாவானது நேற்று ஆயுதப்படை மைதானத்தில் சிறப்புடன் நடைபெற்றது. பின்பு காவல்துறையினால் நடத்தப்பட்ட நடனம், பாட்டு,கவிதை, போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது , மேலும் இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தலைமை குற்றவியல் நீதித்துறையை நடுவர் அவர்கள் , மாவட்ட ஆட்சியர் அவர்கள், இந்திய கடல் பாதுகாப்பு படை தளவாய் காரைக்கால் அவர்கள், குற்றவியல் நீதித்துறை நடுவர்1அவர்கள்,

குற்றவியல் நீதித்துறை நடுவர் 2 அவர்கள், வட்டார போக்குவரத்து துறை ஆய்வாளர் அவர்கள் மற்றும் நாகை மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News