பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு !
பாபநாசம் தொகுதியில் பதட்டமான 11 வாக்குச்சாவடியில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
பாபநாசம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருமான முத்துகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது. பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 1,27,105 ஆண் வாக்காளர்களும் 1,32, 979 பெண் வாக்காளர்களும் 21 மூன்றாம் பாலினத்தவரும் உள்பட 2 , 60, 105 வாக்காளர்கள் உள்ளனர் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 301வாக்கு சாவடி மையங்கள் 167 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் தேர்தல் பணிக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 3 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது வாக்காளர்களுக்கு குடிநீர் ,கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு சக்கர நாற்காலி வசதி ஆகிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பாபநாசம் தொகுதியில் உள்ளிக்கடை, சூலமங்கலம், பாபநாசம் அகர மாங்குடி, கோவத்தக்குடி, அன்னப்பன்பேட்டை, சாலியமங்கலம் பச்சைகோட்டை, தளவாய்பாளையம் கத்தரிநத்தம், அம்மாபேட்டை, திருவலஞ்சுழி ,சுந்தர பெருமாள் கோவில், ஆகிய ஊர்களில் உள்ள 11 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குசாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன அங்கு நுண் பார்வையாளர்கள் துணை ராணுவத்தினர் ஆகியோர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் இவ்வாறு அவர் கூறினார்.
உடன் பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன், தேர்தல் துணை வட்டாச்சியர் விவேகானந்தன் ,வட்ட வழங்கல் அலுவலர் அருணகிரி, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் முருககுமார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அன்பரசி ,கூடுதல் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் பிரியா, மண்டல துணை வட்டாட்சியர்கள் பிரபு , தமயந்தி ஆகியோர் இருந்தனர்