பள்ளி குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்ற பெற்றோர்கள்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள தெற்குபட்டியில் அமைந்துள்ளது அரசு நடுநிலைபள்ளி. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளி கட்டிடம் கட்டி 30 ஆண்டுகள் ஆனநிலையில் ஆங்காங்கே பெயர்ந்து விழுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாலும், கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதாலும் கட்டிடத்தில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிட சுவர்கள் பலமிழந்து இடிந்து விழுந்து விடுவோமா என அஞ்சிய பெற்றோர்கள் இன்று பள்ளிக்கு வந்த தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். மேலும் பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தால் மட்டுமே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது