திருப்பூர் மாணவர்களுக்கு பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு
கிக் பாக்ஸிங்கில் சர்வதேச அளவில் பதக்கம் வென்ற திருப்பூர் மாணவர்களுக்கு பெற்றோர்கள் இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வாக்கோ இந்தியா ஓபன் சர்வதேச சாம்பியன்ஷிப் கிக் பாக்சிங் (WAKO INDIA OPEN INTERNATIONAL CHAMPIONSHIP KICKBOXING) 3-வது சர்வதேச போட்டி கடந்த 11-ம் தேதி புதுடெல்லியில் நடைபெற்றது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஜெர்மனி, தாய்லாந்த் உள்ளிட்ட 21 நாடுகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்றனர்.
தமிழகத்திலிருந்து பல்வேறு பிரிவுகளின் கீழ் 80க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில் திருப்பூரைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தங்கம், வெள்ளி மற்றும் வெங்கலம் பதக்கங்களை சர்வதேச அளவில் பல்வேறு பிரிவுகளின் கீழ்வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தனர். குறிப்பாக திருப்பூரில் இருந்து அனிதா என்பவர் 65 கிலோ கொண்ட பிரிவில் பங்கேற்று தங்கம் வென்றார்.
அக்ஷயா ஸ்ரீ 70 கிலோ, தர்ஷினி 55 கிலோ பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார், அகிலன் 55 கிலோ பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்று திருப்பூருக்கு பெருமை சேர்த்தனர்.
வெற்றி பெற்றவர்கள் ரயில் மூலம் திருப்பூர் ரயில் நிலையம் வந்த பொழுது பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகளை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.