பாராளுமன்ற தொகுதி கோடீஸ்வர வேட்பாளர்கள்
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பொன் ராதாகிருஷ்ணன், பசிலியான் நசரேத்,மரிய ஜெனிபர் ஆகிய மூன்று பேரும் கோடீஸ்வரர்கள்.
Update: 2024-03-26 10:12 GMT
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்த மூன்று வேட்பாளர்களும் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். பாரதிய ஜனதா வேட்பாளரான பொன். ராதாகிருஷ்ணனின் அசையும் சொத்தின் மதிப்பு ரூ. 64 லட்சத்து 3 ஆயிரத்து 778 என குறிப்பிடப்பட்டு உள்ளது. அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.6 கோடியே 99 லட்சத்து 40 ஆயிரத்து 155 என குறிப்பிடப்பட்டு உள்ளது.பொன்.ராதாகிருஷ்ண னின் அசையா சொத்துக்கள் பூர்வீக குடும்ப சொத்துக்கள் என குறிப்பிடப்பட்டுஉள்ளன.அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத்தின் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.3 கோடியே 34 லட்சத்து 77 ஆயிரத்து 241 எனவும், அசையா சொத்தின் மதிப்பு ரூ. 4 கோடியே 82 லட்சத்து 10 ஆயிரத்து 790 எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. பசிலியான் நசரேத்தின் மனைவி மேரி பசிலியானின் அசையும் க சொத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 4 லட்சத்து 95 ஆயிரம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோடீஸ்வர வேட்பாளர்தான் என்பது அவரது அபிடவிட் மூலம் தெரிய வந்துள்ளது. மரிய ஜெனிபரின் அசையும் சொத்தின் மதிப்பு ரூ. 2 கோடியே 41 லட்சத்து 20 ஆயிரத்து 999 எனவும், அசையா சொத்தின் மதிப்பு ரூ.2 கோடியே 13 லட்சத்து 65 ஆயிரத்து 509 எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.அசையும் சொத்தில் 1000 கிராம் தங்க நகைகள், 70 கிராம் பிளாட்டினம் ஆகியவைகளும் அடங்கும். மரிய ஜெனிபரின் கணவர் சாலோமன் தீபக் பெயரிலுள்ள அசையும் சொத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 914 எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி பாராளு மன்ற தொகுதியில் போட்டி யிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் கோடீஸ் வரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.