நாடாளுமன்ற தேர்தல்: அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியர் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளனிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.
வரும் மே மாதத்துடன் தற்போதுள்ள மத்திய அரசின் காலம் முடிவடைய உள்ளதால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசை அமைப்பதற்கு நாடாளுமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு ஒவ்வொரு பணிகளாக மேற்கொண்டு வருகிறது. விரைவில் தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகவும் உள்ளது.
இதனிடைய, கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் மூன்று சட்டமன்ற தொகுதிகள் மட்டும் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை சட்டமன்ற தொகுதி, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டதாக உள்ளது. இதனிடைய நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்து, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று, ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இதில் அரசியல் கட்சியினர் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து தேவையான விளக்கங்களை மாவட்ட ஆட்சியர் அளித்தார். மேலும், அரசியல் கட்சியினரின் கருத்துக்களையும் கேட்டு பதிவு செய்து கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்த பணிகள், நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பதை காட்டுகிறது...