மது போதையில் கோஷ்டி மோதல்

சுங்கான்கடை அருகே மது போதையில் நடந்த கோஷ்டி மோதலில், இரு தரப்பிலும் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2024-01-17 11:00 GMT
பைல் படம்

குமரி மாவட்டம் சுங்கான்கடை அருகே களியங்காடு மேலத்தெருவை  சேர்ந்தவர் மாரியப்பன் (38). சம்பவ தினம் மாலையில் தனது உறவினர் ஒருவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். ஊத்துக்குளி பகுதியில் செல்லும் போது மது போதையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த நடராஜன், சுங்கான் கடை சேர்ந்த மனோகரன் ஆகியோர் மாரியப்பனை போகவிடாமல் தடுத்து நிறுத்தி அவதூறாக பேசி தாக்கியதாக தெரிகிறது.        

Advertisement

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே மாரியப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்து ரெண்டு பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். காயம் அடைந்த மாரியப்பன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் நடராஜன், மனோகரன் ஆகிய 2 பேர் மீது இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.        

அதேபோல ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடராஜன் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் ஊத்துக்குளிக்கரையில் வைத்து மகராஜன், மாரியப்பன், இசக்கிமுத்து, நாகராஜன் ஆகிய நான்கு பேர் மது போதையில் தடுத்து நிறுத்தி அவதூறாக பேசி தாக்கியதாக புகார் அளித்துள்ளார். இது குறித்து மகாராஜன், மாரியப்பன், இசக்கி முத்து, நாகராஜன் ஆகிய நான்கு பேர் மீதும் இரணியல் போலீசார் வழக்கு பூஜை செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News