தடம் மாறும் பஸ்சால் பயணிகள் அவதி!
பொன்னமராவதியில் திருச்சிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. விழா காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டு மாற்று வழித்தடங்களில் இயக்கப்படுகிறது பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.;
Update: 2024-01-25 08:55 GMT
தடம் மாறும் பஸ்சால் பயணிகள் அவதி!
பொன்னமராவதியில் இருந்து இடையாத்தூர், காரையூர், புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் காலை 9:40 மணி மாலை 4:10 மணி ஆகிய நேரங்களில் பொன்னமராவதியில் இருந்து புறப்படுகிறது. விழா காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டு பழனி, சென்னை, மேல்மருவத்தூர், கோவை என்று மாற்று வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இதனால் இந்த பஸ் நம்பி உள்ள மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளை மேலாளரிடம் பயணிகள் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. அமைச்சர் ரகுபதி அறிவுறுத்தியும் பணிமனை கிளை அதிகாரிகள் கேட்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சற்றுகின்றனர். இதை கண்டித்து விரைவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.