பசும்பொன் தேவர் தங்க கவசம் ஒப்படைப்பு

தேவரின் தங்கக் கவசம் பசும்பொன் கோவில் அறக்கட்டளை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.;

Update: 2023-10-25 11:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜையை முன்னிட்டு வருகின்ற 30ஆம் தேதி தேவர் குருபூஜை நடைபெறவுள்ளது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று மரியாதை செலுத்துகிறார். இதனை தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை கடந்த 10.10.2023 அன்று அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தேவர் தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது .

அதனையொட்டி அண்ணா நகர் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வங்கி மேலாளர் முன்னிலையில் கையெழுத்திட்டு தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தேவர் குருபூஜை விழாவிற்காக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கோவில் அறங்காவலரான காந்திமீனாளிடம் ஒப்படைத்தார். 

Advertisement

இந்நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன், முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், டாக்டர் விஜயபாஸ்கர், டாக்டர் மணிகண்டன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி ராஜன் செல்லப்பா, மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி வி ஆர்.ராஜ்சத்யன், இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி, கழக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் மற்றும் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News