சிறுநீரக சிகிச்சை பிரிவு இல்லாததால் நோயாளிகள் அவதி

தமிழகத்தில் புதிதாக துவக்கப்பட்ட 11 அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் சிறுநீரக சிகிச்சை பிரிவு இல்லாததால், நோயாளிகள் அலைகழிக்கப்படுகின்றனர்.

Update: 2023-12-25 15:36 GMT

தமிழகத்தில் புதிதாக துவக்கப்பட்ட 11 அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் சிறுநீரக சிகிச்சை பிரிவு இல்லாததால், நோயாளிகள் அலைகழிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் புதியதாக துவங்கிய 11 அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் சிறுநீரக சிகிச்சை பிரிவு இல்லாததால் நோயாளிகளை பிற மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றக்கூடிய நிலை நீடிக்கிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லுாரிகள் இல்லாத திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், அரியலுார், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதியதாக மருத்துவக்கல்லுாரி 2022 ஜன. 12ல் துவங்கப்பட்டன. ஆனால் இவற்றில் சிறுநீரக மருத்துவத்துறை கிடையாது. இவற்றில் தினமும் குறைந்தது 50 சிறுநீரக நோயாளிகள் வருகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார். இவரே உள் நோயாளிகளுக்கு 1.5 செ.மீ., அளவு வரை சிறுநீரக கற்களை அறுவை சிகிச்சை செய்து வருகிறார்.

இதனால் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடிகிறது. இதர 4 நாட்கள் உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. சிறுநீரக மருத்துவத்துறை இல்லாததால் 1.5 செ.மீ., அளவுக்கு மேல் உள்ளவர்களை பிற மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை நீடிக்கிறது.தேசிய சுகாதார இயக்கத்தின் விதிமுறை படி புதியதாக துவங்கப்பட்ட மருத்துவக்கல்லுாரியில் 5 ஆண்டுகள் மருத்துவ கல்வியை முடித்து, மாணவர்கள் முதுநிலை மருத்துவப்படிப்பிற்கு விண்ணப்பிக்கக்கூடிய நிலை வரும் போது மட்டுமே சிறுநீரக மருத்துவத்துறை செயல்பட துவங்கும்.

இதனால் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.எனவே மருத்துவ மாணவர்கள் 5 ஆண்டுகள் முடிக்கும் வரை காத்திருக்காமல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News