அரசு மருத்துவமனை ஸ்கேன் மையத்தில் நோயாளிகள் அலைக்கழிப்பு !

சிவகங்கை அரசு மருத்துவமனை ஸ்கேன் மையத்தில் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2024-06-14 06:28 GMT

அரசு மருத்துவமனை

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளுக்கும் 1000க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளுக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சிகிச்சை பெற அதிக அளவில் வரும் இம்மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்கள், அறுவை சிகிச்சை நோயாளிகள், வயதானவர்கள் என பலருக்கும் சிகிச்சை அளிப்பதற்காக சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன்கள் எடுக்கப்படுகிறது. தனியார் நிறுவனம் நடத்துவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

தமிழக அரசின் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் மானிய விலையில் சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன்கள் எடுக்கவேண்டாம். ஆனால் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்படுவதில், ஆவணங்கள் சரியில்லை என தாமதித்தும், அலைக்கழிப்பதாக நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் கர்ப்பிணிப் பெண்களும் வயோதிகர்களும், அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளிகளும் அலைக்கழிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து காப்பீட்டு நிறுவனத்தினரிடம் கேட்டபோது, ஆவணங்களில் குறைபாடுகள் உள்ளதாலும், மருத்துவர்களின் அறிக்கையில் திருத்தம் மேற்கொள்ளும் போது அந்த மருத்துவர் பணி முடித்து சென்று விடுவதால் சில சமயங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக தெரிவித்தனர்.

இதே போல மருத்துவமனைகள் லிப்டுகள் செயல்பட்டாமல் பழுதடைந்து இருப்பதால் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ஏழை எளிய மக்களின் நலன் கருதி நடத்தப்படும் அரசு மருத்துவமனையில், தமிழக அரசே சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகளும், உறவினர்களும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News