பட்டுக்கோட்டை வருவாய் தீர்வாயத்தில் 6 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை

பட்டுக்கோட்டை வருவாய் தீர்வாயத்தில் 6 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை, 7 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது.

Update: 2024-06-27 15:47 GMT
பயனாளிகளுக்கு ஆணை வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் 1433- ஆம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம் கணக்குகள் முடித்தல்) ஜூன்.13 முதல் ஜூன் 28 வரை காலை 9 மணிக்கு 9 நாட்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்  வழிகாட்டுதலின்படி அறிவுறுத்தப்பட்ட தினங்களில் நடைபெற்று வருகின்றது. 

இந்நிகழ்வில், ஜமாபந்தி அலுவலராக  குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை  தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கிராம கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றார்.  ஆறாவது நாளாக துவரங்குறிச்சி சரகத்திற்கு வருவாய் தீர்வாயம் நடைபெற்று வருகையில்,

துவரங்குறிச்சி சரகத்தை சேர்ந்த மக்கள், வருவாய் தீர்வாய அலுவலரிடம் மனுக்கள் அளித்ததில் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு 7 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை மற்றும் 6 நபர்களுக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சுகுமார், வட்ட வழங்கல் அலுவலர் ரகுராமன், சமூக பதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் பிரேம்குமார், நகர நிலவரி திட்ட தனி வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி,

நில அளவை ஆய்வாளர் சரவணன், வட்டத்துணை ஆய்வாளர் ரஞ்சித்குமார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கண்ணகி, மண்டல துணை வட்டாட்சியர்கள் சுரேஷ் ராஜேஷ் கிருஷ்ணா, அனைத்து சரக வருவாய் ஆய்வாளர்கள்,

கிராம நிர்வாக அலுவலர்கள்  ஆனந்தஜோதி, மகரஜோதி மற்றும் இதர துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News