பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை

பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது

Update: 2024-04-26 08:51 GMT

அமைதிபேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்கள் 

பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருவைகாவூர் கிராமத்தில் சமுதாய நிலம் குத்தகை ஏலம் விடுவது தொடர்பாக இரு தரப்பினுடைய ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் குதியாளம்மன் கோவிலுக்கு சொந்தமான சமுதாய நிலத்தினை பொது குத்தகை ஏலம் விட சம்மதம் தெரிவித்ததை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டு சுமூகத் தீர்வு காணப்பட்டது மேலும் 3 நபர்கள் கொண்ட நிர்வாக குழுவிற்கு புதிதாக ராஜேந்திரன் வெங்கடாசலம் முருகராஜ் ஆகியோர் நியமன செய்திடவும் கோயிலுக்கு சொந்தமான சமுதாய நிலத்தினை போது ஏலம் விடும்போது கிடைக்கும் ஏலத்தொகையினை ஏற்கனவே 3 நபர்கள் குழுவினர்கள் மூலம் கையாளப்பட்டு வரும் வங்கி கணக்கில் செலுத்துவது எனவும் வங்கி கணக்கில் உள்ள தொகைகளை கையாளுதல் தொடர்பாக 6 நபர்கள் கொண்ட குழுவினர்,

அனைவரின் ஒப்புதல் பெற்று தொகை என கையாளுதல் தொடர்பாக இறுதி முடிவு மேற்கொள்ளப்பட்டு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதால் இப்பிரச்சனை சுமக்க முடிவு கொண்டுவரப்பட்டது மேற்கண்ட அமைதி பேச்சுவார்த்தை மீறி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவோம் எனவும் ஒப்புக்கொண்டனர்.

இக்கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியர் பிரபு சரக வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் பாபநாசம் ஒன்றிய கவுன்சிலர் விஜயன் மற்றும் இருதரப்பிலும் பொறுப்பாளர்களும் கிராம முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News