காங்கயத்தில் இறந்து கிடந்த மயில் பறவை

காங்கேயம் திருப்பூர் ரோடு வாய்க்கால் மேடு பகுதியில் மயில் ஒன்று இருந்து கிடந்தது.

Update: 2024-05-19 14:45 GMT
இந்தியாவின் தேசிய‌ பறவை மயில். தற்போது பெரும்பாலான காடுகளின் அழிக்கப்பட்டு வருவதால் காடுகளில் வாழக்கூடிய வன உயிரினங்கள் அனைத்து மனிதர்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்குள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் விவசாய நிலங்களை மயில் பறவைகள் பெரிய‌ அளவில் ஆக்கிரமித்துள்ளது. விவசாய நிலங்களில் பயிரிடப்படும் நெல், கம்பு, சோளம் போன்றவற்றை நன்கு மேய்ந்து அப்பகுதியில் வாழ்ந்து வரக்கூடியது‌. இந்த நிலையில் காங்கயத்தில் நகரப்பகுதிகளில் மேய்ந்து வந்த சுமார் முழுமையாக வளர்ந்த பெண் மயில் ஒன்று இறந்து கிடந்தது. ஆனால் இவை வாகனத்தில் அடிப்பட்டு இறந்ததா? மின்சாரம் தாக்கி இறந்ததா? உணவு அல்லது தண்ணீர் கிடைக்காமல் இறந்ததா? என்பது தெரியவில்லை என அப்பகுதி வாழ் பொதுமக்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News