நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து - மூதாட்டி படுகாயம்.

Update: 2023-11-24 02:26 GMT

வெங்கமேடு காவல் நிலையம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாலம்மாள்புரம், வாங்கல் சாலையில் வசித்து வருபவர் மருதாயி 80,. இவர் கடந்த 21 ஆம் தேதி இரவு 7 மணியளவில் வாங்கலில் இருந்து கரூர் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பாலம்மாள்புரம் சமுதாயக்கூடம் அருகே வந்தபோது, கரூர் மின்னாம்பள்ளி பகுதியை சேர்ந்த பழனிசாமி (52) என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூவீலர், நடந்து சென்ற மருதாயி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், நிலைகுலைந்து சாலையில் விழுந்த மருதாயிக்கு தலை, வலது கண் புருவம் ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக,மருதாயி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட வெங்கமேடு காவல்துறையினர் டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய, பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News