அனுமதியின்றி இயங்கிய பொக்லைன் உட்பட 3 வாகனங்களுக்கு அபராதம்
சாத்தான்குளம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட பொக்லைன் உள்ளிட்ட 3 வாகனங்களுக்கு ரூ.64,570 அபராதம் விதிக்கப்பட்டது.;
Update: 2024-03-31 11:50 GMT
அனுமதியின்றி இயங்கிய பொக்லைன் உட்பட 3 வாகனங்களுக்கு அபராதம்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் முனுசாமி தலைமையிலான அலுவலா்கள் சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது முதலூா் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 2 பொக்லைன் இயந்திரங்கள், ஒரு லாரி ஆகியவற்றுக்கு ரூ.64,570 அபராதம் விதித்தனா்.
சாத்தான்குளத்தில் பறக்கும் படை சோதனை சாவடியில் உள்ள சாலை தடுப்பில் ஒளிரும் ஸ்டிக்கா்களை, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் முனுசாமி ஒட்டினாா். பறக்கும் படை அலுவலா்களான ஸ்ரீவைகுண்டம் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராம்திலகா, உதவி ஆய்வாளா் லட்சுமணன் மற்றும் போலீஸாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனர்.