பட்டுக்கோட்டையில் சாலைகளில் சுற்றி திரிந்த மாடுகளுக்கு அபராதம்
அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பட்டுக்கோட்டை மெயின் ரோடு சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தின.இதையடுத்து கால்நடை வளர்ப்போர் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை தங்கள் வீடுகளில் வைத்து பராமரிக்க வேண்டும். பொதுவெளியில் விடக்கூடாது மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் மூலம் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதை பொருட்படுத்தாத கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளை முறையாக பராமரிக்காமல் அவை சாலை மற்றும் முக்கிய வீதிகளில் சுற்றி திரிந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வருவதை அறிந்த நகராட்சி நிர்வாகத்தினர் நேற்று சாலைகளில் சுற்றித் திரிந்த 20க்கும் அதிகமான மாடுகளை பிடித்து நகராட்சி அலுவலக வளாகத்தில் கட்டி வைத்தனர். இதனை அடுத்து அந்த கால்நடைகளின் உரிமையாளர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து ரூ.500 அபராதம் கட்டி விட்டு தங்களது மாடுகளை மீட்டுச் சென்றனர்.