பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - கடைகளுக்கு அபராதம்
தென்காசியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
Update: 2024-03-06 05:25 GMT
தென்காசி மாவட்டம், தென்காசி நகராட்சி ரவிச்சந்திரன் ஆணையாளர் உத்தரவின், படி நேற்று மாலையில் சுகாதார அலுவலர் அறிவுரையின்படி, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் மெயின் பஜார் மற்றும் ரதவீதி பகுதிகளில் வணிக நிறுவனங்களில், தடை செய்யப்பட்ட நெகிழி கழிவுகள் பயன்படுத்தப்படுகிறதா என அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் அந்தப் பகுதியில் உள்ள கடைகளில் சுமார் 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும் தென்காசி சுற்றுவட்டார முக்கிய பகுதிகளிலும் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.