புகை பிடித்தவர்களுக்கு அபராதம் விதிப்பு !
பொதுமக்களுக்கு இடையூறாக புகை பிடித்த 13 பேருக்கு தலா ரூ.100 என மொத்தம் ரூ.1,300 அபராதம் விதித்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-09 06:01 GMT
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணா மூர்த்தி, முரளிதரன், லோகேஷ்குமார், சந்தனக்குமார், பிரேம்குமார் உள்ளிட்டோர் நேற்று காமராஜர் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது பொதுமக்களுக்கு இடையூறாக புகை பிடித்த 13 பேருக்கு தலா ரூ.100 என மொத்தம் ரூ.1,300 அபராதம் விதித்தனர். மேலும் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வந்த 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.6000 அபராதம் வித்தனர்.