விழுப்புரத்தில் பென்ஷனர் தினவிழா
விழுப்புரத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் கூட்டமைப்பு சார்பில் பென்ஷனர் தின விழா நடைபெற்றது.
விழுப்புரத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் கூட்டமைப்பு சார்பில் பென்ஷனர் தின விழா நடைபெற்றது. விழுப்புரம் வி.ஆர்.பி., பள்ளியில் நடந்த விழாவுக்கு வட்டார தலைவர் கோபால்சாமி தலைமை வகித்தார். வட்டார பொருளாளர் ராமனுஜம் வரவேற்றார்.
செயலாளர் ராஜமுத்து ஆண்டறிக்கை வாசித்தார். மாநில துணை தலைவர் ராமுசிதம்பரம், மாநில தணிக்கை குழு உறுப்பினர் துரைக்கண்ணு, மாவட்ட தலைவர் சிவகுருநாதன், செயலாளர் விவேகானந்தன் சிறப்புரையாற்றினர். விழாவில், 70,75, 80 வயது நிறைவடைந்த உறுப்பினர்களுக்கு நினைவு பரிசளித்து கவுரவிக்கப்பட்டனர்.
துணை தலைவர்கள் சரவணபவன், ராசகோபால், மாநில பிரதிநிதிகள் ஜோதி, பெருமாள், வட்டார நிர்வாகிகள் கண்ணன், சுப்ரமணியன், சுப்பராயலு, சொக்கலிங்கம், பலராமன், பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இஸ்மாயில் நன்றி கூறினார்.