சுற்றித் திரியும் தெருநாய்களால் மக்கள் அச்சம்:
பெரியமணலியில் சுற்றித் திரியும் தெருநாய்களால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.;
By : King 24x7 Website
Update: 2023-12-21 14:39 GMT
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அருகேயுள்ள பெரியமணலியில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றது. இந்நாய்கள், சாலையில் திடீரென ஓடுவதால், வாகனஓட்டிகள் தவறிவிழுந்து விபத்துகள் நடக்கின்றது. ஒருசிலநாட்களில் சாலையில் செல்லும் மக்களை துரத்திக்கொண்டு ஓடுவதால், மக்கள் நாய்களால், ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். அதுமட்டுமல்லாது சாலையில் செல்லும் பள்ளி சிரார்களையும் துரத்தி செல்வதால் அவர்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே, நாய்களை பிடித்துசெல்ல சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.