ரயில்வே நிர்வாக அறிவிப்பால் மக்கள் குழப்பம்!
தியாகராஜ நகர் ரயில்வே பால ரயில்வே கேட்டில் இரு சக்கர வாகனங்கள் செல்வது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள மாறுபட்ட அறிவுப்புகளால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
Update: 2024-05-17 03:10 GMT
திருநெல்வேலி மாவட்டம் தியாகராஜ நகர் ரயில்வே பாலத்தில் கீழே உள்ள ரயில்வே கேட்டில் இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் நடந்து செல்ல அனுமதி ரயில்வே நிர்வாகம் நேற்று அளித்தது. இந்த நிலையில் இன்று (மே 17) மோட்டார் சைக்கிள்கள் செல்லக்கூடாது. பாதசாரிகள் மட்டுமே செல்ல அனுமதி என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருப்பதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.