அரசு மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாட்டால் மக்கள் ஆவேசம்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரை தட்டுப்பாடு நிலவுவதால் தனியார் மெடிக்கலில் இருந்து வாங்கி வர வற்புறுத்துவதால் மக்கள் ஆவேசம் அடைந்தனர்.;

Update: 2024-06-01 02:49 GMT
மருந்து தட்டுப்பாடு
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருந்து மாத்திரை தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தனியார் மெடிக்கல்களில் மருந்து வாங்கி வரும்படி மருத்துவர்கள் கூறியதால் நோயாளிகளின் உறவினர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு முறையாக பதில் அளிக்காமல் மருத்துவர்கள் அங்கிருந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு முறையாக மருத்துவம் பார்க்காமல் தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்கான அனைத்து நெறிமுறைகளையும் மருத்துவர்கள் கடைபிடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Tags:    

Similar News