மூடியே கிடக்கும் படிப்பகங்களால் மக்கள் வேதனை
பழனியில் பல்வேறு அரசியல் தலைவர்களால் திறக்கப்பட்ட வரலாற்று பெருமைமிக்க சுமார் 7 படிப்பகங்கள் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் மூடுவிழா கண்டிருப்பது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-03-13 08:16 GMT
திறக்கப்படாத படிப்பகங்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி ஆன்மிக தலமாக உள்ளது. பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகை தந்து பழனி முருகனை தரிசனம் செய்வது வழக்கம். அப்படி எப்போதும் மக்கள் கூட்டம் காணப்படுகிற, தொழில் வளங்கள் மிகுந்த பகுதியாக விளங்குகிறது. அப்படியான பழனியில் பல்வேறு அரசியல் தலைவர்களால் திறக்கப்பட்ட வரலாற்று பெருமைமிக்க சுமார் 7 படிப்பகங்கள் தற்போது பயன்பாட்டில் இல்லாது மூடுவிழா கண்டிருப்பது பெரும் வேதனையாக இருக்கிறது.அரசின் சார்பிலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் கட்டப்பட்ட படிப்பகங்கள் திறக்காமலும், திறந்தும் பயன்படுத்த இயலாமலும், திறந்தும் மூடிய நிலையிலேயே இருப்பது வாசகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.