அருப்புக்கோட்டையில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டி சாலை மறியல்

அருப்புக்கோட்டையில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-10 15:51 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி 25வது வார்டுக்கு உட்பட்ட தேவா டெக்ஸ் நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.‌

இப்பகுதியில் சாலை, கழிவுநீர் கால்வாய், மின்விளக்கு, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை என புகார் தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் அருப்புக்கோட்டை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் காரணமாக பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியல் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை நகர் மற்றும் தாலுகா காவல் நிலைய போலீசார் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் செய்தனர்.

அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக அருப்புக்கோட்டை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News