கிணத்துக்கடவு பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்

பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியில் குடியிருக்க வீடுகள் மற்றும் இட வசதி இல்லாமல் தவித்து வரும் அப்பகுதி மக்கள் ஒரே குடிசையில் ஐந்து குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் இடம் கேட்டு பலமுறை அரசுக்கு மனு கொடுத்தும் பயனளிக்காததால் வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டுமொத்த கிராமமே புறக்கணிப்பு.

Update: 2024-03-14 15:40 GMT

தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்

 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியில் அமைந்துள்ளது இமிடிபாளையம் கிராமம்.. இந்த கிராமத்தில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் நூறாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் குடியேறி சுமார் 250.க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

சிறிய அளவில் தரப்பட்ட இடத்தை வைத்து குடிசை அமைத்து ஒரு குடிசை வீட்டில் இரண்டு குடும்பங்கள் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பல ஆண்டுகள் கழித்து ஒரு குடிசை வீட்டில் சுமார் ஐந்து குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் சிறிய அளவில் உள்ள குடிசை வீட்டில் குறைந்தபட்சம் 15 பேர் நெருக்கடியில் குடியிருந்து வருகின்றனர்.. அனைவரும் ஒரே குடிசையில் இரவு நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலையில் வீட்டுக்கு வெளியில் தெருவில் படுத்து உறங்கும் சூழ்நிலை தொடர்ந்து வருவதாகவும்,

மழைக்காலங்களில் வீடுகளில் ஒதுங்கி படுக்க கூட இடமில்லாமல் இம்மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.. இதனால் இலவச வீட்டு மனை பட்டா தங்களுக்கு வேறு பகுதியில் வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பலமுறை அரசு அலுவலகங்களில் மனுக்கள் கொடுக்கப்பட்டும் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் தற்போது வரை இவர்களுக்கு தீர்வு காணவில்லை.. இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி ஒடுக்கப்பட்ட மக்களின் ஓல குரலுக்கு ஓய்வு தர உரிய நடவடிக்கை எடுக்காததால் அரசாங்கத்தின் மீதான உச்சகட்ட எதிர்ப்பை வெளிப்படுத்த தயாராகிவிட்டனர்.

அதன் அடிப்படையில், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி வேட்பாளருக்கும் வாக்களிக்கப் போவதில்லை என முடிவெடுத்து தேர்தலை புறக்கணிப்பு செய்ய இருக்கின்றனர்.. இந்த நிலையில் தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாக வீட்டுமனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்,

உச்சகட்ட எதிர்ப்பாக அரசாங்கம் தந்த ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை குடும்ப அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும், திரும்ப அரசாங்கத்திடம் ஒப்படைப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.. எந்தவித அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வரும் எங்களுக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Tags:    

Similar News