இலஞ்சியில் குப்பை கொட்டிய டிராக்டரை சிறைபிடித்த மக்கள்

இலஞ்சியில் குப்பைகளை கொட்ட வந்த டிராக்டரை மக்கள் சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2024-01-19 09:19 GMT


இலஞ்சியில் குப்பைகளை கொட்ட வந்த டிராக்டரை மக்கள் சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், இலஞ்சி- வல்லம் சாலையோரமுள்ள கருவந்தா என்ற குளத்தில் பேரூராட்சி நிா்வாகத்தினா் கொட்டி வந்துள்ளனா். இதற்கு அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இந்தக் குளத்தில் கொட்டப்படும் குப்பைகளால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், குப்பைகளை கால்நடைகள் தின்று உயிரிழப்பதாகவும், அப்பகுதியில் குப்பைகளை கொட்டாமல் பேரூராட்சி நிா்வாகத்திற்குச் சொந்தமான ஒரு குப்பை கிடங்கை தோ்வு செய்து அதில் குப்பைகளை கொட்ட வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தி வந்தனா்.

ஆனால் அப்பகுதியில் தொடா்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வந்ததால் குப்பைகளை கொட்ட வந்த டிராக்டரை மக்கள் சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சு நடத்தினா். அப்போது, ஒரு வாரத்துக்குள் சாலை ஓரமாக கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தொடா் போராட்டம் நடத்துவோம் எனக் கூறியபடி கலைந்து சென்றனா்.

Tags:    

Similar News