நீர்வரத்து குறைந்ததால் வெறிச்சோடிய காணப்படும் குற்றாலம்
குற்றாலத்தில் நீர்வரத்து வெகுவாக குறைந்து குளிக்க முடியாத அளவிற்கு சிறிதளவே தண்ணீர் விழுவதால் கூட்டமின்றி அருவிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
Update: 2024-02-20 13:20 GMT
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, புலியருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்து குளிக்க முடியாத அளவிற்கு சிறிதளவே தண்ணீர் விழுகிறது. இதனால் நீரின்றி வறண்டு காணப்படும் குற்றாலத்தில் குளிப்பதற்காக மக்கள் கூட்டம் வராததால் குற்றால அருவி கரைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் அமைந்துள்ள கடைகளில் வியாபாரம் குறைந்ததால் வியாபாரிகள் கவலை தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.