தெருநாய்களை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை

மல்லசமுத்திரம் பேரூராட்சியில் அதிகரித்து வரும் தெரு நாய்களால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.;

Update: 2023-12-22 17:33 GMT

மல்லசமுத்திரம் பேரூராட்சியில் அதிகரித்து வரும் தெரு நாய்களால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பேரூராட்சி பகுதியில் அனைத்து வார்டுகளிலும் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் இன பெருக்கத்தால் அதிகரித்து வருகிறது. மல்லசமுத்திரத்தில் இருந்து தினந்தோறும் 1000க்கும் மேற்பட்டோர் சேலம், ஈரோடு நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பள்ளிமாணவர்கள், கல்லூரி மாணவர்கள், கூலி தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள், வியாபாரிகள் பேருந்து நிலையத்திற்கு வந்து பஸ்ஸில் ஏறி பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். எனவே இங்கு, எண்ணற்ற தெரு நாய்கள் இனப்பெருக்கத்தால் உற்பத்தியாகி அனைவரையும் சண்டையிட்டு கடிக்க பாய்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மேலும், நாய்கள் ஒன்றுடன் சண்டையிட்டு மோதிக்கொண்டு தீடீர் என சாலையில் குறுக்கே செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து எலும்பு முறிவுகள் ஏற்பட்டு பெரும் ஆபத்து ஏற்பட்டு மருத்துவ மனைக்கு செல்கிறார்கள். ஆகவே, சம்மந்தபட்ட பேரூராட்சி நிர்வகாமும், புளூகிராஸ் அமைப்பு சார்ந்த வர்களும் தெருநாய்களை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News