காய்ந்த புளியமரத்தை அப்புறப்படுத்த மக்கள் கோரிக்கை

காய்ந்த நிலையில் உள்ள புளியமரத்தை அப்புறப்படுத்த வேண்டி மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2023-11-30 15:05 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் தொகரப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட புரடன்கொட்டாய் கிராமத்தில் இரண்டு புளியமரங்கள் காய்ந்த நிலையில் இப்பவோ, எப்பயோ விழுந்து உயிர்பலி வாங்கும் நிலையில் உள்ளது, தற்போது மழைகாலம் என்பதால் மழை வெள்ளம் ஊருக்குள் புகுந்து 50 க்கும் மேற்ப்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் கழிவுநீர் கால்வாய் அமைத்து மழைநீரை ஊருக்கு வெளியே எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்து, கால்வாய் பணி செய்ய ஒர்க் ஆர்டர் வந்தத நிலையில் ஊருக்குள் உள்ள இந்த காய்த புளியமரத்தால் பணி துவங்க முடியாமல் உள்ளது, இதனால் ஊராட்சி சார்பில் கிராம சபையில் இந்த புளியமரத்தை அப்புறப்படுத்த வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,

அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மழைநீர் ஊருக்குள் நுழைந்து கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் முன் இந்த காய்ந்த புளிய மரத்தை அப்புறப்படுத்தி கழிவுநீர் கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News