ராஜபாளையத்தில் தொடர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

ராஜபாளையத்தில் தொடர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-05-17 14:25 GMT
ராஜபாளையத்தில் கனமழை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், கடந்த 12ம் தேதி மாலை வெப்ப சலனம் காரணமாக சுமார் அரை மணி நேரம் கன மழை பெய்தது. இதனை தொடர்ந்து வந்த 5 நாட்களும் பிற்பகல் தொடங்கி இரவு வரை அவ்வப்போது கன மழையும், அதனை தொடர்ந்து சாரல் மழையும் பெய்து வந்தது.


5 நாட்களும் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் 6 வது நாளான இன்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து நண்பகல் 1 மணிக்கு மேல் நகர் பகுதிகள் மற்றும் நகரை ஒட்டி அமைந்துள்ள தென்றல் நகர், திருவள்ளுவர் நகர், வேலாயுதபுரம், வஉசி நகர், மில் கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் கன மழை பெய்தது.

கன மழையை தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேல் சாரல் மழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக நகரின் பிரதான சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளதால் பொது மக்களும், பாதசாரிகளும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொது மக்களும், தொடர் மழை காரணமாக கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News