சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பலமுறை புகார் அதிமுக மாவட்ட கவுன்சிலர் ஆய்வு

உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை ஈட போவதாக மக்கள் தெரிவித்தனர்

Update: 2023-12-11 01:08 GMT

சுகாதார சீர்கேடு  ஏற்படுவதாக மக்கள் புகார்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சி பகுதியில் உள்ள மாதா கோவில் செல்லும் தெரு பகுதியில் குடிநீர் வசதி,மயான வசதி, உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகள் இல்லை எனவும் வாறுகால்களில் அடைப்பு ஏற்பட்டால் ஊராட்சி நிர்வாகம் சரி செய்வது இல்லை எனவும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்ற பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் மீனா கண்ணன் என்பவரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பின்னர் இது குறித்து அதிமுக மாவட்ட கவுன்சிலர் கணேசன் என்பவரிடம் தெரிவித்தன் அடிப்படையில் அப்பகுதியில் மாவட்ட கவுன்சிலர் கணேசன் சுகாதார சீர்கேடு ஏற்பட்ட பகுதிகள் அடிப்படை வசதிகள் இல்லாத இடங்களில் ஆய்வு மேற்கொண்டு அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டுமென தொலைபேசி மூலம் தெரிவித்தார். நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொது மக்களை திரட்டி கொண்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தார்.
Tags:    

Similar News